Advertisment

'ஆ.ராசா பேச்சு ஸ்டாலினுக்கு உடன்பாடா?' வானதி சீனிவாசன் கேள்வி

Coimbatore: Bjp MLA Vanathi Srinivasan Tamil News: முதலமைச்சர் ராசா உடைய பேச்சை ஆதரிக்கிறாரா? அவரின் இந்த பேச்சை திராவிட முன்னேற்ற கழகம் ஒத்துக் கொள்கிறது. இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vanathi Srinivasan Questions over A. RAJA speech does Stalin agrees

Tamilnadu Bjp MLA Vanathi Srinivasan

Vanathi Srinivasan Tamil News: கோவை சிவனந்தகாலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்டார்.

Advertisment
publive-image

இதனைத் தொடர்ந்து செய்திகளை சந்தித்த பேசிய தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், "தெற்கு தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை எல்லாம் சீரமைத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அவர்களுடைய வேண்டுகோளின் படி அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய உதவிகள் என ஒவ்வொரு அங்கன்வாடி சார்பாக நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். அந்த வகையில் ஒவ்வொரு அங்கன்வாடியாக இந்த வரக்கூடிய நான்கு மாதத்தில் மகளிர் அணி சார்பாக நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம்." என்றார்.

நடிகர் கமலஹாசன் தெற்கு தொகுதியில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வரும் கேள்விக்கு பதிலலதித்த வானதி சீனிவாசன், "ஒரு வருடம் கழித்து இப்போதான் தொகுதி ஞாபகம் வந்திருக்கிறது போல, மனுக்கள் வாங்கலாம்,வாங்கி கொண்டு சென்று அதனை பிக் பாஸில் வைத்து தீர்க்கலாம் என நினைக்க கூடாது, மக்களுக்கு சேவை பண்ணனும் என்றால் நேரடியாக களத்தில் நின்று செய்யலாம் அதனை மக்கள் கிட்ட சொல்லட்டும் இப்போது தெற்கு தொகுதியை ஞாபகம் வைத்து வந்தது நல்ல விஷயம்.

மேலும் முதலமைச்சர் ராசா உடைய பேச்சை ஆதரிக்கிறாரா,அவரின் இந்த பேச்சை திராவிட முன்னேற்ற கழகம் ஒத்துக் கொள்கிறது, இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் மூத்த கட்சியின் நிர்வாகி முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் இம்மாதிரி சட்டத்திற்கு எதிரான வகையில் பேசி இருக்கிறார் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பாஜக புகார் கொடுத்துள்ளது.

publive-image

காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இம்மாதிரியான பேச்சுகளை முதலமைச்சர் மவுனமாக வேடிக்கை பார்ப்பதை, ரசிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் இதற்கென்ன உரிய விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

திமுக சுவரொட்டிக்கு பதிலலதித்த அவர், உங்கள தாண்டி தொட்டு தான் 10 எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு இருக்காங்க ஏற்கனவே தொட்டு காட்டியுள்ளார்கள், ஆகவே இந்த வீராப்பு பேச்சை விட்டு விட்டு வடிகால் வசதி சாலை உள்ளிட்ட செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. பெரியார் உணவகத்தை அடிக்கிறது உடைக்கிறது எந்த விதமான உடன்பாடு பாஜகவிற்கு கிடையாது.

publive-image

இன்று சமூக நீதி நாள் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது, உண்மையான சமூக நீதி நாள் என்றால் பிரதமரின் பிறந்தநாளைத்தான் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டும்,ஏனென்றால் பெரியார் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு என்ன கனவு கண்டாரோ அதனை பிரதமர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

பெரியார் இருந்திருந்தால் பிரதமரின் பிறந்தநாளைத்தான் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட வேண்டுமென கூறியிருப்பார் என தெரிவித்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu Mk Stalin Dmk Coimbatore A Raja Vanathi Srinivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment