மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலயுறுத்தினார்.
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
vanathi-srinivasan | கோவை தெற்கு தொகுதி நெசவாளர் காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற தொகுதி நிதியில் கட்டப்பட்ட மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதனை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் அவர் இறகு பந்து விளையாடினார்.
Advertisment
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், “இறகு பந்தாட்ட மைதானம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை மையமாக வைத்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.
கால நிலை மாற்றத்தினால் புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகள் வருகின்றன. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவில்லை. கார்பன் சம நிலை இலக்காக வைத்து உலக நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்தியாவும் கொள்கையுடன் திட்டங்களை எடுத்து வருகிறது.
கார்பன் சம நிலை அலுவலகம் என முன்னெடுப்பாக தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை மாற்றியுள்ளோம். அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் உருவாக்கி வருகிறோம். இந்தியாவிலே முதல் எம்.எல்.ஏ அலுவலகம் கார்பன் சமநிலை அலுவலகமாக மாற்றுவது எங்கள் இலக்கு. இயற்கையை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும்.
இறகுப் பந்தாட்டம் ஆடிய வானதி சீனிவாசன்
Advertisment
Advertisements
தூத்துக்குடி வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாக நிதி அளிப்பு குறித்து சொல்லியுள்ளார், மத்திய அரசு மீது பழி போடுவதாக மாநில அரசின் செயல்பாடு உள்ளது. தேசிய பேரிடர் குழு களத்தில் பணி செய்யும் போது, முதல்வர் டெல்லியில் கூட்டணி கூட்டத்தில் இருக்கிறார்.
பண அரசியல் பேசுவதை விட்டுவிட்டு மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும். அமைச்சர் உதய நிதி பேச்சை நான்கு நாட்களாக கவனித்து வருகிறோம். மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பிரதமரை சந்திக்க முதல்வர் செல்லவில்லை. கூட்டணி கூட்டத்திற்கு சென்றவர் பிரதமரை சந்தித்து வருகிறார். அப்பறம் நள்ளிரவில் சந்தித்தார். பிரதமர் முதல்வரை சந்தித்து பாதிப்புகளை கேட்டறிந்தார். திமுக தலைவர்கள் வட மாநில தொழிலாளர்களை தரக்குறைவாக பேசுவது முதல்முறை இல்லை. தொடர்ச்சியாக பேசுவதும் மன்னிப்பு கேட்பதுமாக உள்ளது” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“