கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கதர் பவன் அங்காடியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு விற்பனையை இன்று தொடங்கி வைத்தார்.
முன்னதாக கதர் பவன் விற்பனை நிலையத்தில் மகாத்மா காந்தியடிகள் மற்றும் காமராஜர் ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து கைத்தறி கதர் ஆடைகள் பட்டு சேலை மற்றும் கைவினைப் பொருட்களை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:
'தமிழகத்தில் நாடு முழுவதும் உள்ளூர் பகுதிகளில் தயாரிக்கப்படுகின்ற பொருட்களை, சர்வோதய பொருட்களை, காதி பொருட்களை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டும். அதன் வாயிலாக உள்ளூர் பொருட்கள் மேம்பாடு மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்படுகின்ற பொருட்களுக்கு கிடைக்கும். மேலும், அவற்றுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற வகையில் 'Vocal for Local' என பாரத பிரதமர் எங்கு சென்றாலும் அதனை பயன்படுத்தி வருகிறார். மோடி அவர்கள் நம் ஊர் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்ளூர் பொருட்கள் கிராமப் பொருளாதாரம் சார்ந்தது. பண்டிகை நாட்களில் நம்முடைய நாட்டில் தயாரிக்கப்படக்கூடிய சுதேசி பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
எல்லாரும் காதி கடைகளுக்கு சென்று அவர்களுக்கு பிடித்தவற்றை வாங்கிக் கொண்டு வருகிறார்கள். கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள 60 வருடமாக இருக்கின்ற சர்வோதயா சங்கத்தின் காதி கடையில் பொருட்களை வாங்கி வருகிறோம். 40% தள்ளுபடியும் கொடுத்து வருகிறார்கள்.
காதி விற்பனை 33,000 கோடியிலிருந்து 9 ஆண்டுகளில் 1,34,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்க கூடிய பொருட்கள் மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுப்பதால் உலக நாடுகள் பட்டியலில் இந்திய பொருட்களுக்கான தனித்துவமான ஒரு மார்க்கெட்டை உருவாக்குவதோடு, நாட்டின் முன்னேற்றமும் உறுதிப்படுத்துகின்றது. மோடி அவர்கள் ஜி20 மாநாட்டில் அனைத்து விருந்தினர்களுக்கும் நமது நாட்டில் பாரம்பரிய முறைப்படி அந்தந்த பகுதியில் கிடைக்கக்கூடிய பொருட்களை பரிசளித்தார். அயல்நாடுகளுக்கு செல்லும்போது கூட அங்குள்ள தலைவர்களுக்கு நம்மூரில் கிடைக்கக்கூடிய கைவினைப் பொருட்களை பரிசாக கொடுத்தார்.
டெல்லி பயணத்தை பற்றிய கேள்விக்கு, டெல்லி பயணம் சிறப்பாக இருந்தது. மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. கட்சி தேசிய தலைமை மற்றும் முக்கியமான தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். சிறப்பாக இருந்தது.
ப.சிதம்பரம் 33 சதவீத சட்ட மசோதவை காங்கிரஸ் மனநிலையில் இருந்து பேசி வருகிறார், அதை கொண்டு வந்து இருப்பவர் பாரத பிரதமர் மோடி. அவர் எதை சொல்கிறாரோ அதை செய்யக்கூடியவர். காங்கிரஸ் காலத்தில் போல சொல்லிவிட்டு கொண்டு வர மாட்டார்கள் என கருத கூடாது. பெண்களுக்கான உரிமை கண்டிப்பாக வழங்கப்படும்.
இருசக்கர வாகனத்தில் மது விற்பனை நடந்து வருவது பற்றிய கேள்விக்கு, அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை எந்த ஒரு சுனக்கமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டணி பற்றிய கேள்விக்கு, சத்தீஸ்கர் மாநிலம் ராஜஸ்தான் தேர்தலுக்கான வேட்பாளரகள் தேர்வு செய்யக்கூடிய கூட்டம் தான் நடந்தது. இரண்டு மாநிலத்தில் தேர்தலின் போது பா.ஜ.க செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது.
ஓ.பி.எஸ் பா.ஜ.க-வில் இணைப்பது பற்றி கேள்விக்கு, அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் கோவையில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை தூய்மை பாரத நிகழ்ச்சியில் பீளமேடு பகுதியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, ரூ.3500 கோடிக்கு மேலாக மத்திய அரசு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார் என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.