கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்க்கு முன்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.48 கோடி மக்களுக்கும் மேலாக முதல்முறையாக பாஜக ஆட்சியில் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் உரிமை என்றாலும் அதை ஏழைகளுக்கு சென்றடைய வங்கி கணக்குகள் செயல்படுகிறது. முத்ரா வங்கி திட்டத்தில் 68 சதவீதம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர்.
இந்திய நாட்டுப் பெண்களுக்கு இரத்த சோகை அதிகம். சத்து குறைபாடு காரணமாக அதிகமாக பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணி கால பராமரிப்பு, பாலூட்டும் நிலை, இளம் சிறார்களுக்கு சுகாதார திட்டங்கள் ஆகியவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
சாலையோர வியாபாரிகளுக்கு உதவி செய்ததின் வாயிலாக மீண்டும் தொழில் செய்ய உதவி கொடுத்துள்ளோம். ஏழு குறைபாடுகள் இருந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என்பதை 21 குறைபாடுகளாக வகைப்படுத்தி உள்ளது மத்திய அரசு. 25 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர்.
1400 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆன்லைன் திட்டத்தில் விற்பனை செய்ய மாநில அரசாங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியிருந்தேன் அவர்கள் முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
23 கோடி மண்வள அட்டைகள் வழங்கியதின் வாயிலாக விவசாயிகள் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் இளைஞர்களுக்கு மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கு வேண்டி தனி இலாக்காவை உருவாக்கியது மத்திய அரசு. கிராமப்புறம் நகர்ப்புறம் வீடுகள் என 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சிறப்பாக உலக அளவில் செயல்பட்டதற்கான நாட்டில் இந்தியாவிற்கு பெருமை கிடைத்தது.
வெளிநாடுகளில் மாட்டி தவித்த இந்தியர்களுக்கு ஆபரேஷன் கங்கா, காவேரி போன்ற திட்டத்தின் மூலம் அழைத்து வந்தது. எந்த நாடுகளாலும் கையாள முடியாததை இந்தியா வெளியுறவு துறை கொள்கை மூலம் கையாண்டுள்ளது.
ஐந்தாவது பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடாக இந்தியா விளங்கி கொண்டுள்ளது. இதற்கு காரணம் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சனைகள் மாறி உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை எளிமையாக உள்ளது.உலக அளவில் இந்தியாவில் 40% டிஜிட்டல் பயன்பாடு உள்ளது. ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்துள்ளது. மருத்துவ உள்கட்ட அமைப்பு வசதி மற்றும் 23 எய்ம்ஸ் ஆக அதிகரித்துள்ளது. ஒன்பது வருட கால ஆட்சி நிறைவு என்பது இந்தியாவைப் பற்றிய பார்வை பிரதமருக்கு உலக அளவில் கிடைத்துள்ள பெருமை.ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது.பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியது. ரயில்வே துறையில் மாற்றங்கள் என்பதை கண்களால் பார்த்து வருகிறீர்கள். பிரதமர் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை முதலில் செயல்படுத்த தெரிவித்தார்.பாதுகாப்பான ரயில் பயணத்தை செயல்படுத்த மத்திய அரசு செயல்பட்டது.குறிப்பிட்ட சம்பவம், துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சம்பவத்தின் காரணமாக ஒட்டுமொத்தமாக ரயில்வே அமைச்சகத்தை மறந்து விட முடியாது.இந்த விவகாரத்தில் எதையும் காப்பாற்ற விரும்பவில்லை மூடி மறைக்க விரும்பவில்லை. யார் தவறு செய்திருந்தாலும் காப்பாற்ற நினைக்காது.
கர்நாடகா வெற்றியை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி பாஜகவை வீழ்த்த விடலாம் என்றால் அந்த கனவு பலிக்காது. ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து பேசுவது நாட்டின் மரியாதைக்கு எதிரானது.மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் திமுக தமிழகத்தின் நலனை காப்பாற்ற போகிறார்களா என்பதை வரக்கூடிய காலத்தில் பார்ப்போம்.தமிழகத்திற்கு அதிக முதலீடு வந்தால் பாஜக ஆதரிக்கும்.ஆனால் துபாய் சென்று விட்டு சொன்ன முதலீடுகள் இதுவரை எந்த தகவலும் இல்லை. விளம்பர பலகைகள் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வந்துள்ளனர்.புதிதாக திமுக ஆட்சி வந்த பிறகு விளம்பரப் பலகைகள் அதிகரித்து வருகிறது.விளம்பர பலகை வைக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பவம் நடக்கும்போது மட்டும் மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதும் உள்ளது.
விளம்பர பலகை விவகாரத்தில் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதாக உள்ளது போல் உள்ளது என இவ்வாறு தெரிவித்தார். பாஜக - கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.