Advertisment

ஐஇ தமிழ் முகநூல் நேரலையில் பாஜக வானதி சீனிவாசன் உரையாடல்

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் பாஜகவினரின் பங்கு மற்றும் இதுவரை கொரோனாவுக்கு எதிரான போரில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக தமிழக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று மாலை 6.30 மணிக்கு ஐ.இ. தமிழ் ஃபேஸ்புக் நேலையில் பேசுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vanathi srinivasan tamil nadu BJP general secretary, பாஜக, வானதி சீனிவாசன், ஐ.இ தமிழ், ஐ.இ தமிழ் ஃபேஸ்புக் நேரலையில் வானதி சீனிவாசன், bjp vanathi srinivasan ietamil fb live, vanathi srinivasan live at ietamil fb, ie tamil fb live, coronavirus, lockdown

vanathi srinivasan tamil nadu BJP general secretary, பாஜக, வானதி சீனிவாசன், ஐ.இ தமிழ், ஐ.இ தமிழ் ஃபேஸ்புக் நேரலையில் வானதி சீனிவாசன், bjp vanathi srinivasan ietamil fb live, vanathi srinivasan live at ietamil fb, ie tamil fb live, coronavirus, lockdown

கொரோனா வைரஸ் பரலவைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் பாஜகவினரின் பங்கு மற்றும் இதுவரை கொரோனாவுக்கு எதிரான போரில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக தமிழக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று மாலை 6.30 மணிக்கு ஐ.இ. தமிழ் ஃபேஸ்புக் நேலையில் பேசுகிறார்.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? ஊரடங்கு காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் கலைஞர்கள் என பலரும் ஐ.இ தமிழ் ஃபேஸ்புக் நேரலையில் பங்கேற்று வாசகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

இதுவரை ஐ.இ தமிழ் ஃபேஸ்புக் நேரலையில், இயக்குனர் லஷ்மி ராமகிருஷ்ணன், நடிகை செயற்பாட்டாளர் ரோகினி, நடிகர் எஸ்.வி.சேகர், இயக்குனர் சீனு ராமசாமி, விசிக தலைவரும் சிதம்பரம் எம்.பி-யுமான திருமாவளவன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திமுகவின் செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் பேசியுள்ளனர்.

அந்த வரிசையில், பாஜகவின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ஐ.இ. தமிழ் ஃபேஸ்புக் நேரலையில் வாசகர்களுடன் பேசுகிறார்.

தமிழக பாஜகவில் பொறுப்பு வகிக்கும் வானதி சீனிவாசன் அனைவராலும் அறியப்படும் பெண் ஆளுமை. இவர் டிவி தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாஜகவுக்கு எதிரான விவமர்சனங்களுக்கு தனது கனிவான பேச்சின் உறுதியாக மறுப்பு தெரிவித்து கவனம் பெறுபவர்.

இன்று நமது இந்தியன் எக்ஸ்பிரஸின் தமிழ் ஐ.இ. தமிழ் ஃபேஸ் புக் நேரலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் பாஜகவினரின் பங்கு என்ன? இதுவரை கொரோனாவுக்கு எதிரான போரில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக தமிழக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று மாலை 6.30 மணிக்கு பேசுகிறார். வாசகர்கள் இந்த நேரலையில் பங்கேற்று கம்மெண்ட்டில் கேள்விகள் எழுப்பி அவருடன் உரையாடலாம். குவாரண்டைனை பயனுள்ள வகையில் செலவிட வாசகர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment