/indian-express-tamil/media/media_files/5Trhm853kZusmr3l1CGi.jpg)
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேற்று (நவ.1) கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று தனக்கு காய்ச்சல் குறைந்து நலமுடன் இருப்பதாக X தளத்தில் வானதி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கொரோனா தொற்று காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். நலமுடன் இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன்.நலமுடன் இருக்கிறேன்.
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 2, 2023
Tested positive for COVID-19 and currently getting treated in Coimbatore.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.