பாஜக தேசிய மகளிரணி தலைவியாக தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisment
தமிழக பாஜகவின் துணைத் தலைவர் கே. அண்ணாமலை விடுத்துள்ள பாராட்டுக் குறிப்பில், " தமிழக பாஜகவின் சிறந்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிரணி தலைவியாக நியமிக்கப்பட்டார். இந்த செய்தி எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த பொறுப்பிலும் ‘அக்கா’ சிறந்து விளங்குவார் என்று எனக்குத் தெரியும்" என்று தெரிவித்தார்.
Advertisment
Advertisements
முன்னதாக, கட்சியின் துணைத் தலைவர், தேசிய பொதுச் செயலாளர்,தேசியச் செயலாளர், தேசிய செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பட்டியலை ஜே.பி நட்டா வெளியிட்டார். இந்த தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறவில்லை. இந்நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவியாக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞரான வானதி சீனிவாசன், பா.ஜனதா மாணவர் அமைப்பான ஏ.பி. வி.பி.யில் 1989–ல் சேர்ந்தார். பின்பு, பா.ஜனதா மாநில மகளிர் அணி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியின் மாநிலச் செயலாளர், மாநிலப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியிலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியிலும் பாசக சார்பில் போட்டியிட்டார்