வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புது வரவு; கான்பூர் ஹனுமன் லங்கூர் குரங்கு, அரிய பறவைகள்

சென்னை புறநகரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என அழைக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா நாட்டிலுள்ள மிகப்பெரிய, பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்று.

சென்னை புறநகரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என அழைக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா நாட்டிலுள்ள மிகப்பெரிய, பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்று.

author-image
WebDesk
New Update
langur monkey

ஹனுமன் லங்கூர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கான்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து 10 ஹனுமன் லாங்கூர் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் அடங்கிய 4 இனங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஜனவரி 28-ம் தேதி கொண்டுவரப்பட்டன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Tamil Nadu’s Vandalur zoo gets Hanuman Langurs, endangered bird species from Kanpur zoo

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பிரபலமாக அழைக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு ஹனுமன் லங்கூர் இனக் குரங்குகள் கிடைத்துள்ளன. விலங்கு பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து அழிந்து வரும் அரிய பறவை இனங்கள் கிடைத்துள்ளன.

கான்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து 10 ஹனுமன் லாங்கூர் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி இமயமலை கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் அடங்கிய 4 இனங்கள் ஜனவரி 28-ம் தேதி கொண்டுவரப்பட்டது.

Advertisment
Advertisements

இதற்கு மாற்றாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள், இரண்டு ஜோடி சுட்டி மான்கள், மூன்று நெருப்புக் கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள், ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகியவற்றை திங்கள்கிழமை வழங்கியது.

சென்னை புறநகரில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, நாட்டின் மிகப்பெரிய, பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்று என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த உயிரியல் பூங்கா, குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பெரும் கூட்டத்தை ஈர்க்கிறது. தமிழ்நாட்டில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, 5 வயதுக்குட்பட்ட 10,000 குழந்தைகள் உட்பட 69,000 பார்வையாளர்கள் விலங்கியல் பூங்காவிற்கு வருகை தந்தனர்.

இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளுக்கு இணங்கவும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் முன்மொழியப்பட்ட விலங்கு பரிமாற்ற திட்டத்தின் படியும் விலங்குகள் பரிமாறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"இது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வன விலங்குகளுக்கான வெற்றிகரமாக கூண்டுக்குள் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்யும் திட்டத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு, சுட்டி மான் மற்றும் நெருப்புக் கோழிகளை இனப்பெருக்கம் செய்வதில் வெற்றிகரமாக உள்ளது. எனவே, மேற்கூறிய விலங்குகள் பெரும்பாலும் மற்ற இந்திய உயிரியல் பூங்காக்களுடன் விலங்கு பரிமாற்ற திட்டத்தின் மூலம் மற்ற காட்டு விலங்குகளுக்காக பரிமாறப்படுகின்றன” என்று விலங்கியல் பூங்காவின் அறிக்கை கூறுகிறது.

கான்பூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள், வனச் சரக அலுவலர்கள் மற்றும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோருடன் இந்த விலங்குகளின் சென்னை பயணம் இருந்தது.

இந்த விலங்குகள் வந்தவுடன், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தலில் வைக்க தற்காலிக கூண்டுகளுக்கு மாற்றப்பட்டன. பின்னர், விலங்கியல் பூங்காவில் உள்ள காட்சிப் பகுதிக்கு இந்த விலங்குகள் மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இந்த வண்டலூர் விலங்கியல் பூங்காவில் அதிக மக்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, 5 வயதுக்குட்பட்ட 10,000 குழந்தைகள் உட்பட 69,000 பார்வையாளர்கள் விலங்கியல் பூங்காவிற்கு வருகை தந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vandalur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: