Chennai Tamil News: சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்.

ஆனால் தொடர் விடுமுறையின் காரணத்தால், அக்டோபர் 4ஆம் தேதியான நாளை (செவ்வாய்க்கிழமை) அன்று, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது.
பண்டிகை காலம் என்பதால் இது விதிவிலக்காக கருதப்படுகிறது என்று வண்டலூர் பூங்கா நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil