சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் குழந்தைகளுக்கான சம்மர் கேம்ப் நடத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
வனவிலங்குகளைப் பற்றியும், அதன் பண்புகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் குழந்தைகள் கற்றுக்கொள்ள, ஏப்ரல் 12ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் குழந்தைகள் இந்த கேம்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்மர் கேம்ப் மூலம், உயிரியல் பூங்காவில் உள்ள அதிகாரிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு - பூனை இன வனவிலங்குகள், தாவரவகைகள், சிறிய மாமிச உண்ணிகள், பல்வேறு வகையான பறவைகள் மற்றும் ஊர்வன பற்றி கற்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்காவின் செயல்பாடுகள் குறித்தும் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் என்று நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழ்நாடு வனத் துறையின் AAZP, https://aazp.in/summercamp2023 என்ற இணைப்பின் மூலம், உயிரியல் பூங்கா சம்மர் கேம்பில் பங்கேற்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த சம்மர் கேம்ப் ஆனது, ஏப்ரல் 12 முதல் மே 7 வரை நான்கு தொகுதிகளாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் தொகுதியானது ஏப்ரல் 12 முதல் 14 வரையிலும், இரண்டாவது தொகுதி ஏப்ரல் 19 முதல் 21 வரையிலும், மூன்றாவது தொகுதி ஏப்ரல் 26 முதல் 28 வரையிலும், கடைசித் தொகுதி மே 5 முதல் 7 வரையிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil