சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றதை ஒட்டி கோவை ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்தடைந்தது.
வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது இதனை ஒட்டி 12″வது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை – கோவை இடையே இயக்கப்பட்டது. சென்னை சென்ட்ரலில் அதிகாலை 5 40 மணிக்கு புறப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில் முற்பகல் 11 .40 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடைந்தது.

அங்கிருந்து பகல் 12. 40 மணிக்கு புறப்பட்டு மாலை 6:40 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையுள்ளது. இரு மார்க்கமாகவும் செல்லக்கூடிய இந்த வந்தே பாரத் ரயிலானது ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு திருப்பூர் ஆகிய நிலையங்களிலும் நின்று செல்லும். வந்தே பாரத் ரயிலின் இப்பயணத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான். கோவை