scorecardresearch

‘வந்தே பாரத்’ ரயிலை கொடியசைத்து வழியனுப்பிய தமிழக ஆளுநர்

மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை காசியில் இருந்து வாரணாசி வழியாக செல்லும் படி தொடங்கப்பட்டிருக்கிறது.

‘வந்தே பாரத்’ ரயிலை கொடியசைத்து வழியனுப்பிய தமிழக ஆளுநர்

மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை காசியில் இருந்து வாரணாசி வழியாக செல்லும் படி தொடங்கப்பட்டிருக்கிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசிக்கு செல்லக்கூடிய இந்த ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் துவக்கிவைத்தார்.

சுதந்திரத்தின் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, காசி தமிழ் சங்கமம் என்ற இந்நிகழ்ச்சியை உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நடைபெற்றது.

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்கிற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமேஸ்வரத்திற்கு காசிக்கும் உள்ள தொன்மையை கொண்டாடும் விதத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் காரணமாக, ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட ரயிலை எழும்பூரில் கொடியசைத்து வழியனுப்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

‘வந்தே பாரத்’ என்கிற இந்த ரயில்சேவை ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வழியாக வாரணாசி செல்கிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “காசியை நாம் மறந்துவிட்டோம். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் நீண்ட தொடர்பு உள்ளது.

இந்த ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்கிற நிகழ்ச்சியின் வாயிலாக, காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தொடர்பு என்பது புதுப்பிக்கப்படும்”, என்று கூறுகிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vande bharat express inaugurated by tamilnadu governor rn ravi

Best of Express