கோவை-பெங்களூரு இடையேயான தமிழ்நாட்டின் 4-வது வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்கப்பட்டது.
கோவையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் 8 ரயில் பெட்டிகள் கொண்ட கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையை அயோத்தியில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.
இதனை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை எம்பி நடராஜன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/n6j9dV4tZBHw6tcoSLl8.jpeg)
/indian-express-tamil/media/media_files/DGh9UjSq0rMXdB5JPcBF.jpeg)
/indian-express-tamil/media/media_files/pHRTpVye9djVxF9JsOXz.jpeg)
இந்த வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவ மாணவிகள், பயணிகள் சென்றனர். இந்த ரயில் சேவை ஜனவரி 1 ஆம் தேதி முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு,சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் முதல் வகுப்பில் 44 பேரும் இரண்டாம் வகுப்பில் 592 பேரும் மொத்தமாக 636 பேர் பயணிக்கலாம்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்