சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு நடத்தினர். இதில் 9 பெட்டிகள் சேதமடைந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி சென்னையில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக சென்னைக்கு அதாவது தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வந்தே பாரத் ரயில் சேவை மக்களிடத்தில் பல்வேறு பாராட்டுகளை பெற்றது. அதிக கட்டணமாக இருந்தாலும், இதற்கு அதிக வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு கிளம்பியது. இந்த ரயில் இரவு 10.30 மணியளவில் வாஞ்சி மணியாச்சி சென்றபோது, மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் 9 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக இருப்பு பாதை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“