scorecardresearch

மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில்: சென்னை- ஜோலார்பேட்டை இடையே உச்சபட்ச வேகத்திற்கு அனுமதி

வந்தே பாரத் ரயில் சேவை, மக்கள் பயன்பாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமையில் இருந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vande bharat modi

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வரை இயக்கவிருக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மேலும் வந்தே பாரத் ரயில் சேவை, மக்கள் பயன்பாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமையில் இருந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டமிடப்பட்ட இந்த ரயில் சேவை, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரதத்தின் ரயில் சேவையில், பயணிகள் தகவல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், நான்கு அவசரகால ஜன்னல்கள் மற்றும் ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு அவசரகால விளக்குகள், சிறந்த வெப்ப காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு மற்றும் பயோ வாக்யூம் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

திட்டமிடப்பட்ட இந்த ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோயம்புத்தூரை வந்தடையும்.

இந்த ரயில் கோயம்பத்தூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vande bharat express train to run at 130kmph details

Best of Express