sabarimala | special-trains | சபரிமலை மகரஜோதியை முன்னிட்டு டிசம்பர் 15ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ட்விட்டர் எக்ஸில், ரயில்களின் நேர அட்டவணையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் மற்றும் கோட்டயம் இடையே வந்தே பாரத் சபரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் 06151 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-கோட்டயம் வந்தே பாரத் சிறப்பு ரயில் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 4:30 மணிக்குப் புறப்பட்டு, டிசம்பர் 15, 17, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அதே நாளில் மாலை 4:15 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.
இதேபோல், ரயில் எண் 06152 கோட்டயம்-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் சபரி வாராந்திர இருமுறை சிறப்பு ரயில் கோட்டயத்தில் இருந்து அதிகாலை 4:40 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை 5:15 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை சென்றடையும். இந்த ரயில் டிசம்பர் 16, 18, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இந்த ரயில்கள் காட்பாடி, சேலம், பாலக்காடு மற்றும் ஆலுவா உள்ளிட்ட குறிப்பிட்ட நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளன.
கச்சேகுடா- கொல்லம்- கச்சேகுடா சிறப்பு ரயில்கள்
இது தவிர, ரயில் எண் 07109 கச்சேகுடா-கொல்லம் தெலுங்கானாவில் உள்ள கச்சேகுடாவில் இருந்து டிசம்பர் 18 மற்றும் 25 மற்றும் ஜனவரி 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரவு 11:45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் அதன் இலக்கான கொல்லம், காலை 05:30 மணிக்கு சென்றடையும்.
கொல்லத்தில் இருந்து திரும்பும் ரயில் (எண் 07110) இரவு 10:45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மாலை 03:45 மணிக்கு கச்சேகுடாவை சென்றடையும். இந்த ரயில் டிசம்பர் 20 மற்றும் 27 மற்றும் ஜனவரி 3, 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“