சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திநெல்வேலி வரைச் செல்லும் வந்தே பாரத் ரயில் தொடங்கப்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முக்கிய இடங்களுக்கு வந்தே பாரத் ரயில் மூலம் பயணம் செய்தால், பயண நேரம் குறைகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டுமானால் 8 மணி நேரம் தேவைப்படும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 5 மணி நேரத்திற்கு உள்ளாகவே செல்ல முடியும். சென்னை – கோவை, சென்னை- மைசூர், திருவனந்தபுரம் – காசர்கோடு உள்ளிட்ட 3 முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் வருகின்ற ஆகஸ்டு 6ம் தேதி முதல் இயக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் 6ம் தேதி தொடக்க விழா நடைபெறும் என்றும் தகவல் வெளியாது.
இந்நிலையில் ஆகஸ்ட் 6ம் தேதி ரயில் இயக்கப்படாது என்றும் இது தொடர்பாக வேலைகள் நடந்து வருவதாகவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சென்னை –நெல்லை வந்தே பாரத் ரயில் எப்போது தொடங்கப்படும் என்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“