/indian-express-tamil/media/media_files/2025/09/10/madurai-to-bengaluru-vande-bharat-express-2025-09-10-10-43-56.jpeg)
Madurai to Bengaluru Vande Bharat Express
மதுரை - பெங்களூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளின் அதிகப்படியான கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று தொடங்கப்பட்டு, செப்டம்பர் 2 முதல் நிரந்தர ரயிலாக இயங்கி வருகிறது. தற்போது 7 சேர் கார் மற்றும் 1 எக்சிகியூடிவ் என மொத்தம் 8 பெட்டிகளுடன் இயங்கி வந்தது.
இனி, நாளை முதல் 14 சேர் கார் மற்றும் 2 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டிகளுடன், மொத்தம் 16 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படும். இதற்கான பெட்டிகள் கோழிக்கோட்டில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பயண நேரம் மற்றும் நிறுத்தும் இடங்கள்:
இந்த ரயில் மதுரையிலிருந்து தினமும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், பெங்களூருவிலிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மதுரை வந்தடைகிறது. செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை இருக்காது.
இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த கூடுதல் பெட்டிகள் இணைப்பு, பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும் என்பதால், இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.