Advertisment

Chennai- Kovai Vande Bharat: ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை... 6 மணி நேர பயணக் கட்டணம் இவ்வளவா?! முன்பதிவு தொடக்கம்

'வந்தே பாரத் ரயில் சேவை (வண்டி எண்: 20644) கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 11.50 மணியளவில் வந்தடையும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vande bharat express

Vande Bharat Express Train (Source: PTI)

சென்னையில் இருந்து கோயம்பத்தூர் வரை இயக்கப்படும் ரயில் சேவையான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' நாளை (ஏப்ரல் 8-ந் தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Advertisment

இந்த ரயில் சேவை, சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. 6 மணி நேர பயணத்திற்கு ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் 'வந்தே பாரத் ரயில் சேவை (வண்டி எண்: 20644) கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 11.50 மணியளவில் வந்தடையும்.

திரும்பி செல்லும் வழியில், திருப்பூருக்கு காலை 6.35 மணிக்கு சென்றடைந்து, அங்கிருந்து காலை 6.37 மணிக்கு புறப்பட்டு, ஈரோட்டுக்கு காலை 7.12 மணிக்கு சென்றடையம்.

மேலும், ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு, சேலத்துக்கு காலை 7.58 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு பயணிக்கும் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20643), மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும்.

வரும் வழியில், சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்தடைந்து, மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்தடையும்.

மேலும் ஈரோட்டில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, திருப்பூருக்கு இரவு 7.13 மணிக்கு வந்தடைந்து, இரவு 7.15 மணிக்கு மீண்டும் புறப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Narendra Modi Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment