தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் விவரம், டிக்கெட் கட்டணங்கள் உள்ளிட்ட தகவல்களை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
வந்தே பாரத் ரயில்கள்
எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் மைசூரு, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் முதல் விஜயவாடா, சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் முதல் பெங்களூரு கன்டோன்மென்ட் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
திருநெல்வேலியிலிருந்து வரும் இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தாம்பரம் உள்ளிட்ட 14 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னையை அடைய 630 கிமீ தூரத்தை ஏழு மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயில் செவ்வாய் கிழமைகளைத் தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இயங்கும்.
Vande bharat Trian | Southern Railway | திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. திரும்பும் பயணம் சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. டிக்கெட் விலை ரூ.1,610 முதல் ரூ.3,055 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் சென்னை-விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இந்த வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல் மற்றும் தெனாலி சந்திப்பு வழியாக 516 கிமீ தூரத்தை கடந்து விஜயவாடாவை 6 மணி 40 நிமிடங்களில் சென்றடையும்.
செவ்வாய் கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு விஜயவாடா சென்றடையும். திரும்பும் பயணம் விஜயவாடாவில் இருந்து பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு சென்னையில் எம்ஜிஆர் நகரில் முடிவடைகிறது. டிக்கெட் விலை ரூ.1,420 முதல் ரூ.2,630 வரை உள்ளது.
சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இந்த வழித்தடத்தில் உள்ள மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை விட இந்த ரயில் உங்களுக்கு ஒரு மணி நேரம் இருபது நிமிடங்களை மிச்சப்படுத்தும். வரும் வழியில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலத்தில் நிறுத்தப்படும்.
புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும். கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் 11.50 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவை சென்றடைகிறது. டிக்கெட் விலை ரூ.1,317 முதல் ரூ.2,661 வரை உள்ளது.
சென்னை - மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலான இதன் சேவை நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து மைசூரு செல்லும் இந்த ரயில் காட்பாடி மற்றும் பெங்களூருவில் நின்று செல்லும்.
இது புதன்கிழமை தவிர அனைத்து வாரமும் இயங்கும். சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மைசூரு சந்திப்பை அடைந்து, மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தடையும், தூரத்தை ஆறரை மணி நேரத்தில் கடக்கும்.
இந்த ரயிலில் டிக்கெட் விலை ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்-பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20642/20641 கோயம்புத்தூர் - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் 39 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும், இது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரையும் கர்நாடகாவின் பெங்களூரையும் இணைக்கிறது.
30 டிசம்பர் 2023 அன்று அயோத்தி தாம் சந்திப்பில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த ரயில் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த ரயில் தற்போது வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது, சராசரியாக 58 km/h (36 mph) வேகத்தில் 6 மணி 30 நிமிட பயண நேரத்தில் 375 km (233 mi) தூரத்தை கடக்கிறது.
இந்த ரயில் கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து பெங்களூர் கண்டோன்மென்ட் வரை திருப்பூர், ஈரோடு ஜே.என்., சேலம் ஜே.என்., தருமபுரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் ஏசி நாற்காலி காருக்கு (சிசி) ரூ.1400.00, எக்ஸிகியூட்டிவ் சேர் காருக்கு (இசி) ரூ.2355.00. பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு தட்கல் டிக்கெட்டின் விலை ஏசி நாற்காலி காருக்கு (சிசி) ரூ.1630.00 மற்றும் எக்ஸிகியூட்டிவ் நாற்காலி காருக்கு (இசி) ரூ.2835.00 ஆக உள்ளது.
விமானத்தை விட எளிதான பயணம்
பொதுவாக வந்தே பாரத் ரயில்கள் எளிதான பயணத்தக்கு உதவுகின்றன. கோயம்புத்தூரில் இருந்து காலை புறப்படுவதால், சென்னைக்கு வருபவர்கள் எளிதாக இதில் வர முடியும்.
அதேபோல் சென்னை- மைசூரு வந்தே பாரத் ரயில் கிட்டத்தட்ட 6.30 மணி நேரத்தில் சென்றடைகிறது. இது, விமானத்தைப் போன்ற எளிதான பயணத்தை வழங்குகிறது.
மேலும், கோயம்புத்தூர்-பெங்களூரு ரயிலும் 6.30 மணி நேரத்தில் செல்வதால் அடிக்கடி பெங்களூரு செல்லும் நபர்களுக்கு உதவிக்கரமாக இருக்கும்.
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலை பொறுத்தமட்டில் 14 ரயில் நிலையங்களில் நின்று பயண தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் சென்றடைகிறது.
சென்னை-நெல்லை
நெல்லையில் இருந்து காலை புறப்பட்டு மதியம் சென்னை வருவதால் இது மதியம் அலுவலக பணிக்கு திட்டமிடும் நபர்களுக்கு எளிதாக இருக்கும். பொதுவாக சென்னையில் இருந்து விமானத்தில் நெல்லைக்கு வருவது கூட அவ்வளவு எளிதல்ல.
ஏனெனில் அருகில் உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு நெல்லை வருவதற்கு கூடுதலாக 2 முதல் 2.30 மணிகள் வரை எடுத்துக் கொள்ளும். அப்படி பார்க்கையில் வந்தே பாரத் ரயில் பயணத்தை எளிதுப்படுத்துகிறது என்பது மறுப்பதற்கில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.