Advertisment

’வந்தே மாதரம்’ பாடலை கல்வி நிலையங்களில் வாரம் ஒருமுறை பாட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

”வந்தே மாதரம் பாடலை வாரம் ஒருமுறை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை பள்ளிகள், கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களில் பாட வேண்டும்.”

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
madras-high-court

வந்தே மாதரம் பாடலை அனைத்து கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஒலிபரப்பி பாட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

அரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வில், 107-வது கேள்வியாக வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு, சரியானதை தேர்வு செய்ய கூறப்பட்டது. இதற்கு வங்கமொழி என பதிலளித்த வீரமணி என்ற விண்ணப்பதாரர், பாட புத்தகத்தில் வங்கமொழி என்றே கூறப்பட்டுள்ளதால், அந்த விடையை எழுதிய தனக்கு ஒரு மதிப்பெண்கள் வழங்கவும், ஒரு ஆசிரியர் பணியிடத்தை தனக்கு நிறுத்தி வைக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த மனுவில், தேர்வில் தகுதி மதிப்பெண் 90 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு 89 மதிப்பெண்கள் வழங்கி தோல்வியடைந்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு சரியான விடையை, விடை புத்தகத்தில் கூறவில்லை எனவும் முறையாக தேர்வு தாளை மதிப்பிடவில்லை எனவும் வீரமணி மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வத்தே மாதரம் பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது என கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் பிற வழக்கறிஞர்களும் உதவவும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி தெரிவித்தார். மேலும் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்டது என்பது தொடர்பாக ஆவணங்களை திரட்டிய அண்ணாமலை, புவனேஷ்வரி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் அதனை நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

இதனையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி முரளிதரன் தள்ளிவைத்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் செவ்வாய் கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி முரளிதரன், தன்னுடைய உத்தரவில்,

வந்தே மாதரம் பாடல் பக்கிம் சந்திர சாட்டர்ஜி 1882-ஆம் ஆண்டு எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் உள்ளது.

சுதந்திர போராட்டத்தின் போது மக்களை எழுச்சியடைய செய்த இந்த பாடலின் மகத்துவத்தையும், வரும் இளம் தலைமுறையினருக்கு நாட்டுப்பற்றை வளர்க்க வந்தே மாதரம் பாடலை வாரம் ஒருமுறை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை பள்ளிகள், கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களில் ஒலிபரப்பி பாட வேண்டும். மேலும் அரசு அலுவலகம், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மாதம் ஒரு முறை பாட வேண்டும் என உத்தரவிட்டனர். அதேபோல அரசு இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வந்தேமாதரம் பாடலை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இந்த பாடலை பட சங்கடப்படுபவர்களை அவர்களின் கருத்தை அறிந்து அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாக தலைமை செயலாளர் சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் சரியான பதிலை எழுதிய வீரமணிக்கு ஒரு மதிப்பெண் வழங்கி, அவருக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கவும் உத்தரவிட்டார்.

Madras High Court Justice M V Muralidharan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment