Advertisment

10.5% வன்னியர் இடஒதுக்கீடு; உயர் கல்வித்துறை புதிய அறிவிப்பு

Vanniyar 10.5 reservation vacancies can be filled with other backward classes: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் காலி இடங்கள் இருந்தால் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை சேர்க்கலாம்; உயர்கல்வித்துறை அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Medical admission process begins in TN

மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் (File)

கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisment

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள மற்ற சாதியினருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவும், சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் சட்டமானது.

இந்நிலையில், கல்வி நிறுவனங்களில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள ஆணையில், தமிழ்நாட்டில் உயர்கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலுள்ள மூன்று பகுதிகளில் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வன்னியர்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (சீர்மரபினர்) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இதர பிரிவு) ஏதேனும் ஒன்றில் தகுதியான நபர் இல்லாத நிலையில் ஏற்படும் காலியிடத்தினை இதர பிரிவிலிருந்து பின்வரும் சுழற்சி முறையில் நிரப்பவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டால், அதனை இதர உட்பிரிவுகளான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (சீர்மரபினர்) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இதர பிரிவு) ஆகிய பிரிவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ,முறையே 7%. 2.5% இட ஒதுக்கீட்டிலிருந்து நிரப்ப வேண்டும். இந்த விகிதம் 14.5 % ஆகும். எனவே, 19 புள்ளி இன சுழற்சி பட்டியல் பின்பற்ற வேண்டும். இதில் 14 பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினரும், 5 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இதர பிரிவினரும் அடங்குவர் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Vanniyar Reservation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment