ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வன்னியர்கள் வாக்களிக்க வேண்டும் என வன்னியர் சத்திரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வன்னியர் சத்திரிய கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம் வருமாறு:
ஆர்.கே.நகர் தொகுதியில் 35 சதவிததிற்கும் மேற்பட்ட வன்னிய வாக்குகள் இருப்பதால் இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பண்ருட்டி ராமசந்திரன் ஆகிய இருவரில் ஒருவரை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.கவிற்கு கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு மடங்கு எங்கள் வன்னியர் சமுதாயம் உள்ளது. தமிழகத்தில் 121 சட்டமன்றம், 20 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்க கூடியவர்களாக நாங்கள் இருக்கிறோம். ஆனால் ஆட்சி, அரசியலில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் வன்னியர்கள் தொடந்து
புறக்கணிப்பட்டு ஒரம் கட்டப்பட்டு வருகிறோம். ஆனால் எங்களின் வாக்குகளை மட்டும் அக்கட்சிகள் முழுமையாக பெற்று ஆட்சி அதிகாரத்தை ருசித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் துணை வேந்தர் பதவிகள் 26 இருந்தும் ஒருவர் கூட வன்னியர்கள் இல்லை. தமிழ்நாடு தேர்வு ஆணை உறுப்பினர்களில் ஒருவரும் இல்லை. ஐஏஎஸ்., ஐபிஎஸ்., அதிகாரிகள் மற்றும் உயர் பதவிகளிலும் யாரும் இல்லை. சாதாரண பதவிகளில் அமர்த்தி தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருகிறார்கள். எங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையென்றாலும் பட்டியலின எஸ்.சி/எஸ்.டி (ரிசர்வ் தொகுதி மூலம்) அந்த சமுதாயத்திற்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் எங்கள் சமுதாய உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் எங்க சமுதாயத்திற்கு 5 அமைச்சர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் வலுவான இலாக்கள் இல்லை. தமிழக முதல்வர், துணை முதல்வர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகயளவில் அமைச்சர்களாகவும் அதுவும் இரண்டு, மூன்று வலுவான துறைகளை உள்ளடக்கியும் உள்ளனர்.
மக்கள் தொகை அடிப்படையிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையிலும் சமூக நீதி அடிப்படையியிலும் பார்த்தால் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தான் முதல்வர் பதவி அளித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் துணை முதலமைச்சர் பதவியாவது கொடுத்து இருக்க வேண்டும். மேலும் எட்டு அமைச்சர்கள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் புறக்கணிக்கப்பட்டுயிருக்கிறோம்.
தங்களை பாதுகாத்துக்கொள்ள வன்னியர்களுக்குள் மோதலை உருவாக்கி குளிர் காய்ந்து வருக்கிறாகள். மற்ற சமூகத்தினருக்கு பதவிகள் கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.
வன்னியர் பொதுச்சொத்து நலவாரியம் 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்போது ஐ.ஏ.எஸ் சந்தானம் தலைவராக நியமிக்கபட்டு அரசாணை வெளியிட்டது. 2011 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இதுவரை செயல்படாமல் இருக்கிறது.
இடஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்று 2010-ம் ஆண்டு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக கூறினார் இதுவரை அமைக்கவில்லை. எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த சாதாரண அறிவிப்பைக்கூட அறிவிக்க அரசுக்கு மனமில்லை.
எனவே தொடர்ந்து எங்கள் சமுதாயத்தை புறக்கணித்தும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத ஆளும் அதிமுகவிற்கு எதிராக ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வன்னியர் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் இக்கூட்டதித்தின் மூலம் வலியுறுத்துக்கிறோம் வன்னியர் கூட்டு இயக்கத்தின் சார்பில் எங்கள் சமுதாய மக்களிடத்தில் திண்ணை பிரச்சாரமும், தெருமுனை பிரசாரம் தீவிரமாக செய்யவுள்ளோம். எங்கள் சக்தியை நிரூபிக்கவே இந்த முடிவை இந்த கூட்டத்தின் மூலம் தீர்மானித்துள்ளோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.