வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு

Vanniyar reservation judgement Tamilnadu Government Minister Ponmudi Tamil News ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8-ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு
உயர்க் கல்வித்துறை அமைச்சர் முனைவர். பொன்முடி

Vanniyar reservation judgement Tamilnadu Government Minister Ponmudi Tamil News : சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபைத் தேர்தலையொட்டி மிகவும் அவரசமாக இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்து இந்த சட்டத்தை ரத்து செய்தது. இதனை அடுத்து, இத்தகைய சட்டம் ரத்து செய்யப்பட்ட இந்தத் தீர்ப்புக்கு பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஏமாற்றம் தெரிவித்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டிற்குச் செல்கிறது என்றும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைப் பல்கலைக்கழகங்களில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 7.5% இடஒதுக்கீட்டில் பொறியியல் சேர்க்கை பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்புக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8-ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vanniyar reservation judgement tamilnadu government minister ponmudi tamil news

Exit mobile version