Advertisment

ஜெய் பீம் சர்ச்சை: ரூ.5 கோடி கேட்டு சூர்யா- ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்

24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ஜெய் பீம் சர்ச்சை: ரூ.5 கோடி கேட்டு சூர்யா- ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சில காட்சிகளில் வன்னியர் சமூதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறதாக சர்ச்சைகள் எழுந்தது.

Advertisment

இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. அதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது.

இதை தொடர்ந்து அக்னி கலசம் இடம்பெற்ற படத்தை மாற்றி விட்டு அதற்கு பதிலாக மகாலட்சுமி படம் இடம் பெறும் வகையில், காலண்டரை கிராபிக்ஸ் மூலம் மாற்றி விட்டனர்.

publive-image

இதற்கிடையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் படக்குழுவினருக்கு 9 கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டார் . ஆனால் இந்த அறிக்கைக்கு பதில் அளித்த சூர்யா,படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி வக்கீல் நோட்டீஸ்

இந்நிலையில், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருள்மொழி தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

publive-image

அந்த நோட்டீஸில், "தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டது வன்னியர் சமுதாயம். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரவலாக வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் குரு. ஆனால் வன்னியர் சமுதாயத்தை இந்த திரைப்படத்தில் தவறாக சித்தரித்து உள்ளனர்.

மன்னிப்பு கோராவிட்டால் வழக்கு தொடரப்படும்

எனவே, வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். மேலும், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் . 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jai Bhim Surya Vanniyar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment