திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்று,ம் அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டேவை ஆபாசமாக சித்தரித்ததாக நாம் தமிழர் கட்சியனரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழி செயல் என தி.மு.க எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் எதிராகவும் தொடர்ச்சியாக இணையத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் அவதூறு கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதனால், எக்ஸ் தளத்தில் இருந்து நானும், எனது மனைவியும் விலகுவதாக திருச்சி எஸ்.பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.
பெண்கள் ஆபசமாக, அருவெறுக்கத்தக்க முறையில் பிரசாரம் செய்வதை ஏற்க இயலாது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.
”பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயர்த்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்கள் ஆபசாமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரசாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ், மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ் கரம்பற்றி எனது ஆதரையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கனிமொழி பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“