தூத்துகுடி, ஸ்ரீவைகுண்டம் அருகில் வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் கொலை தொடர்பாக தமிழக முதல்வருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்ட அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவராக இருப்பவர், கார்த்திக். இவருக்கு வயது 35. சில நாட்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வி.ஏ.ஓ வாக இருந்த லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது கொலை தொடர்பாகவும், தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராக கார்த்திக் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக ஐடி பிரிவு நிர்வாகி திலீபன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் கரூர் காவல்துறை, கார்த்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil