2021 முதல் சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக ராதிகா களமிறங்கினார்.
ஆனால் வெற்றி பெறவில்லை.
இப்போது மகள் வரலட்சுமி திருமணத்தில் ராதிகாவும், சரத்குமாரும் பிஸியாக உள்ளனர். சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவருக்கும் குடும்பத்துடன் தேடிச் சென்று அழைப்பிதழ் வைத்து திருமணத்துக்கு அழைத்து வருகின்றனர்.
இதுதொடர்பான புகைப்படங்களையும் தங்கள் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை, சரத்குமார், ராதிகா வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து மகள் வரலட்சுமி திருமண அழைப்பிதழை வழங்கினர். அவர்களுடன் வரலட்சுமி மற்றும் வருங்கால மருமகன் நிக்கோலஸ் ஆகியோரும் இருந்தனர்.
அப்போது எடுத்த புகைப்படத்தை தன் X பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சரத்குமார் அதில்,
”பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்களை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நானும், எனது மனைவி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து, இந்தியாவின் வரலாற்று சாதனையாக மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடிஜி அவர்கள் தேர்வானதற்கு வாழ்த்துகளை தெரிவித்து, சென்னையில் நடைபெறவுள்ள மகள் வரலஷ்மி - நிக்கோலை ஆகியோரின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தோம். மேலும், நமது பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் கட்சி பணிகள், மக்கள் பணிகள் குறித்தும், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடியதில் மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்களை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
— R Sarath Kumar (@realsarathkumar) June 28, 2024
நானும், எனது மனைவி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து,… pic.twitter.com/J03SHZER6t
மேலும் இந்த சந்திப்பு குறித்து நியூஸ் 18 செய்தி சேனலுக்கு ராதிகா அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தலில் நான் நன்றாகப் போராடினேன், இப்போது 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்குமாறு பிரதமர் என்னிடம் கூறினார். தமிழக மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதிசெய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நாங்கள் இருவரும் உறுதியளித்ததாக, தெரிவித்தார்.
வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்தது. இவர்களின் திருமணம் தாய்லாந்திலும் ரிசப்ஷன் சென்னையிலும் நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.