Advertisment

செல்பிக்கு தடை, லைஃப் ஜாக்கெட் கட்டாயம்; கன்னியாகுமரி படகில் புதிய கட்டுப்பாடுகள்

கேரள படகு விபத்து எதிரொலியாக, கன்னியாகுமரி பூம்பூகார் படகு பயணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Taking selfies on the Kanyakumari boat is prohibited

கன்னியாகுமரி படகில் செல்பி எடுக்க தடை

கன்னியாகுமரிக்கு தினம் ஆயிரக்கணக்கில் வருகை தரும் உள் நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் இருந்தும் சர்வதேச பயணிகள் வருகின்றனர்.

Advertisment

இந்தப் பயணிகள் விவேகானந்தர் பாறை, திருவள்ளூர் சிலையை பார்வையிட தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில். குகன், பொதிகை, விவேகானந்தர் என மூன்று படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்தப் படகு போக்குவரத்தில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஓர் படகில் 150 பயணிகள் வரை ஏற்றி செல்ல வேண்டும் என்றும் நின்று கொண்டு செல்பி எடுக்க அனுமதி இல்லை என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் சுற்றுலாப் பயணிகள் லைஃப் ஜாக்கெட்டை முறையாக அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், லைஃப் ஜாக்கெட் போதியளவு சுத்தம் இல்லை எனவும் சுற்றலாப் பயணிகள் கூறியுள்ளனர்.

கேரளாவில் படகு விபத்துக்குள்ளான நிலையில், கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து குறித்து பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி பல்வேறு மொழிகளில் பயணிகள் புரியும் வகையில் அறிவிப்பும் செய்யப்பட்டுவருகிறது.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kanyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment