பூங்கா மற்றும் கவியரவி பகுதிகளில் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் நின்றனர்.
தொடர் விடுமுறையால் ஆழியார் அணையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இன்று முதல் வரும் 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Advertisment
இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை, ஆழியாறு பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரண்டனர்.
பொதுவாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை, பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கவியறிவு உள்ளிட்ட இடங்களுக்கு கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
Advertisment
Advertisements
இந்நிலையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய விடுமுறை நாட்கள் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திரண்டதால் பூங்கா மற்றும் கவியரவி பகுதிகளில் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் நின்றனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்கள் நத்தைப் போல் ஊர்ந்து சென்றன. தொடர்ந்து, போக்குவரத்து போலீசார், வாகன நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆழியார் பகுதியில் மக்கள் கூட்டம் படையெடுத்த வண்ணம் உள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil