/indian-express-tamil/media/media_files/2025/10/17/vck-cadres-hc-2025-10-17-20-34-12.jpg)
இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாக ராஜீவ் காந்தியும், அவர் வேண்டும் என்றே வம்பு இழுத்ததாக வி.சி.க தரப்பிலும் மாறி மாறி குற்றம்சாட்டினர்.
கடந்த வாரம் அக்.7-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். ஆர்ப்பாட்டம் முடிந்து புறப்பட்ட திருமாவளவன் உயர் நீதிமன்ற வளாகம் அருகே அவருடைய வாகனம் செல்லும்போது திடீரென சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனத்தில் வழக்கறிஞர் ஒருவர் வந்தார்.
திருமாவளவன் கார் தனது வாகனத்தில் மோதியதாக அந்த வழக்கறிஞர் கூறினார். உடனே திருமாவளவனுடன் வந்த வி.சி.க-வினர், அந்த வழக்கறிஞரின் வாகனத்தை சாலையில் தள்ளிவிட்டு, அந்த வழக்கறிஞரையும் தாக்கினர்.
இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாக ராஜீவ் காந்தியும், அவர் வேண்டும் என்றே வம்பு இழுத்ததாக வி.சி.க தரப்பிலும் மாறி மாறி குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உத்தரவிட்டார். பார் கவுன்சில் துணைத் தலைவர்கள் அருணாச்சலம், சரவணன் அடங்கிய குழு விசாரணை நடத்தி 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் கே.பாலு பார் கவுன்சில் தலைவருக்கு கடிதம் எழுதினார். இதற்கு, கடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கே.பாலுவுக்கு எதிராக மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் பாலு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தனக்கு எதிராக மிரட்ட விடுக்கப்பட்டது தொடர்பாக, காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரினர்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டது தொடர்பாக எதன் அடிப்படையில் இரு தரப்பு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.