திருமாவளவனுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வேண்டும்: திருச்சியில் வி.சி.க ஆர்ப்பாட்டம்

வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, திருச்சியில் வி.சி.க-வினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, திருச்சியில் வி.சி.க-வினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
VCK protest 3

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் இசட் பிரிவு பாதுகாப்பு வி.சி.க தலைவருக்கும் வழங்க வேண்டி திருச்சியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் இசட் பிரிவு பாதுகாப்பு வி.சி.க தலைவருக்கும் வழங்க வேண்டி திருச்சியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்த விபரம் வருமாறு:

Advertisment

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புசெல்வன் ஆகியோர் தலைமையில் ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள காதி கிராப்ட் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

vck demonstrate 2

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, திருமாவளவனுக்கு மத்திய அரசு உடனடியாக Z + பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், தமிழக அரசு பரிந்துரைக்க வலியுறுத்தியும்,  உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராஜேஷ்கி‌ஷோரை கைது செய்ய வலியுறுத்தியும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

VCK protest 3
அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் இசட் பிரிவு பாதுகாப்பு வி.சி.க தலைவருக்கும் வழங்க வேண்டி திருச்சியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisment
Advertisements

இந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் திருச்சி - கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகிகள் அரசு, புரோஸ்கான், விஜயபாலு, அஷ்ரப்அலி  மற்றும் மாவட்ட நிர்வாகி சந்தனமொழி, மாநில மகளிர் அணி செயலாளர் லட்சுமிபிரியா, கஸ்தூரி, நிர்வாகிகள் சிறுத்தை குணா  மற்றும் கட்சியினர் ஜெயக்குமார்,  செல்வகுமார், இனியவன், தண்டபாணி, முருகேசன், விஜி , எட்வின், மீரான்பாய்,, செண்பகத் தமிழன் ராஜவேல் பழனிவேல் மாங்குடி கமல், ஜொனவாலிசி, எமல்டா, விஜயகுமார்,  துரைசங்கர், கவியரசன் மணிவளவன் இளையராஜா, தேவி, அயிலை மூர்த்தி, சிறுத்தை குணா, அசோக்மேத்தா, செங்கதிர்செந்தில், கணேசன், மாநில, மாவட்ட, நகர, நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஏராளமான கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி

Vck

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: