Advertisment

காட்டுமன்னார்கோவிலில் சிந்தனைச் செல்வன் போட்டி: விசிக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

விசிக சார்பில் போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் போட்டியிடுகிறார்.

author-image
WebDesk
Mar 14, 2021 23:40 IST
vck candidates list, viduthalai chiruththaikal katchi, thirumavalavan, kaattumannarkoyil, sinthanai selvan, gouthama sanna, vanni arasu, ss balaji, alur sha navas, விசிக வேட்பாளர்கள் பட்டில், சிந்தனைச் செல்வன், காட்டுமன்னார் கோவில், vck dmk alliance, tamil nadu assembly elections

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக சார்பில் போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் போட்டியிடுகிறார்.

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பதிலும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதிலும் மும்முரமாக உள்ளனர்.

அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 6 தொகுதிகளில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச் 14) வெளியிட்டுள்ளார்.

விசிக வேட்பாளர்கள் பட்டியல்

1.காட்டுமன்னார்கோவில் (தனி) - சிந்தனைச்செல்வன்

2.செய்யூர் (தனி) - பனையூர் பாபு

3.வானூர் (தனி) - வன்னியரசு

4.திருப்போரூர் (தனி) - எஸ்.எஸ்.பாலாஜி

5.அரக்கோணம் (தனி) - கௌதம சன்னா

6.நாகப்பட்டினம் - ஆளூர் ஷா நவாஸ்

ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடுகின்றனர்.

#Vck #Vck Dmk Alliance #Vck Canddidate List
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment