Advertisment

வி.சி.க அதிகாரப் பகிர்வு கேட்டால் எப்படி பா.ஜ.க-வுக்கு ஆதரவாகும்? ஆ. ராசாவுக்கு ஆதவ் அர்ஜுனா கேள்வி

தி.மு.க கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது என்றும் வி.சி.க அதிகாரப் பகிர்வு கேட்டால் எப்படி பா.ஜ.க-வுக்கு ஆதரவாகும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு என்ன வி.சி.க துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Aadhav Arjuna A Raja

தி.மு.க கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு என்ன வி.சி.க துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது என்றும் வி.சி.க அதிகாரப் பகிர்வு கேட்டால் எப்படி பா.ஜ.க-வுக்கு ஆதரவாகும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு என்ன வி.சி.க துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் அக்டோபர் 2-ம் தேதி மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு அறிவித்ததில் இருந்தே தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆளும் தி.மு.க கூட்டணியில் இருக்கும் வி.சி.க, மது ஒழிப்பு மாநாடு நடத்துவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஆட்சியில் அதிகாரம் என்ற திருமாவளவனின் கோரிக்கை மீண்டும் வைக்கப்பட்டதில், தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் வி.சி.க மீது விமர்சனங்களை வைக்கத் தொடங்கிவிட்டனர். 

இதனிடையே,  திருமாவளவன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பிறகு, வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

இதன்மூலம், வி.சி.க - தி.மு.க இடையேயான சலசலப்பு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், வி.சி.க துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஒரு நேர்காணலில், வி.சிக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது என்ன தவறு இருக்கிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர் முதலமைச்சராக வேண்டும் என்கிறார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவருக்கு துணை முதலமைச்சர் பதவி கேட்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, எங்கள் தலைவர் ஆட்சி அதிகாரத்தில், அமைச்சரவையில் பங்கு கேட்பது எப்படி தவறாகும் என்று கேள்வி எழுப்பி ஒரு பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளார். 

ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு வி.சி.க-வில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் அதரவு தெரிவிக்காவிட்டாலும், வி.சி.க தொண்டர்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

வி.சி.க துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்து பதிலளித்த தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, வி.சி.க-வில் புதியதாக சேர்ந்தவர், அரசியல் தெளிவு இல்லாமல், அரசியல் அறமில்லாமல் பேசியுள்ளார் என்று கூறினார்.

இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு என்ன வி.சி.க துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த நேர்காணலின்போது, “ஆ. ராசா உங்கள் மீது சந்தேகம் எழுப்புகிறார். கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டம் கேட்பது நகைப்புக்குரிய ஒன்று. இப்படி பேசுவது கூட்டணி அறத்துக்கு சரியாக வராது. இது போல, பா.ஜ.க-வுக்கு துணை போகிறவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க பின்னணியில் இருக்கிறது, பா.ஜ.க-தான் உங்களைத் தூண்டுகிறது என்று ஆ. ராசா சந்தேகம் எழுப்புவதாக நெறியாளர் கேள்வி எழுப்புகிறார். 

இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, “வி.சி.க அதிகாரப் பகிர்வு நோக்கிப் போவது எப்படி பா.ஜ.க ஆதரவாக இருக்கும். இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். அதிகாரத்தில் பங்கு கேட்டால், பா.ஜ.க-வுக்கு ஆதரவு, சங்கி என்று சொல்லாதீர்கள். எந்த இடத்திலும் வி.சி.க-வின் கொடி ஏற்றவிடவில்லை. மதுரையின் வி.சி.க கொடி ஏற்றவிடவில்லை ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், வி.சி.க துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது  எக்ஸ் சமூக வலதளப் பக்கத்தில், “செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலதான் இருக்கும்” என்று நெல்சன் மண்டேலா வாசகத்தைக் குறிப்பிட்டு தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment