சில நாட்களுக்கு முன்னதாக, ஐரோப்பிய பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சனாதன - மனுஸ்மிருதுகளை மேற்கோள் காட்டி பேசினார்.
மனுதர்மம் பெண்களை இழிவுசெய்கிறது என்ற கூறிய தொல். திருமாவளவன் அதிலிள்ள சில கருத்துக்களையும் எடுத்துரைத்தார்.
இந்நிலையில், பெண்களை இழிவுபடுத்தியதாக, தொல். திருமாவளவன் மீது சைபர் கிரைம் காவல்துறை 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது.
காவல்துறையின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, பெண்களை இழிவுசெய்யும் மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வலிறுத்தி விசிக சார்பில் சென்னை, புதுச்சேரியில் மிகப்பெரிய ஆர்ப்பட்டாம் நேற்று நடைபெற்றது.
பெண்களை இழிவுசெய்யும் மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வலிறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் #BanManu https://t.co/L8GvYeykf2
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 24, 2020
திமுக தலைவர் மு. க ஸ்டாலின் விடுத்துள்ள கண்டன அறிவிப்பில், " வருணாசிரம-மனுஸ்மிருதி பெயரால் மறுக்கப்பட்ட பெண்ணுரிமையைச் சுட்டி பெரியாரும், அம்பேத்கரும் ஏற்படுத்திய விழிப்புணர்வின் பின்னணியில் பேசியதைத் திரித்து, மதவெறியைத் தூண்டுகிறவர்களை விட்டுவிட்டு தோழர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் விடுத்துள்ள கண்டன அறிவிப்பில், " தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றம் ஆகும்? பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்? " என்று கேள்வி எழுப்பினார்.
தோழர் தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சனாதனத்திற்கு எதிராக தலைவர்கள்
--------------------
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அவர்களின் அறிக்கை
---------------------#BanManu
பதிவு: சமூக ஊடகம். pic.twitter.com/zh5X11LqO9
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 24, 2020
மதிமுக கட்சி நிறுவனர் வைகோ வெளியிட்ட செய்திக் குறிப்பில், " மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துக்களைத்தான் தொல். திருமாவளவன் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அதை வேறுவிதமாக திரித்தி, அவர் மீது, சங்க பரிவார் அமைப்புக்லைன் ஆதரவாளர்கள் , குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர். உண்மையில், புகார் கொடுத்தவர்கள் தான் குற்றவாளிகள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தொல். திருமாவளவன் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கிருஷ்ணகிரி பாமக பிரமுகர் தியாகராஜனை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.
வழக்குகள் யாவையும் சட்ட ரீதியாக சந்திபேன் என்ற தொல். திருமாவளவன் தெரிவித்தார். தனது போராட்டம் ஒரு தனிப்பட்ட சமயத்துக்கு எதிரானது இல்லை என்றும், கருத்தியில் ரீதியான் போராட்டாம் என்றும் திருமாவளவன் தெளிவுபடுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.