Advertisment

வி.சி.க சார்பில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு: கார்கே, ஸ்டாலின் பங்கேற்பு

வி.சி.க சார்பில் வரும் 26-ம் தேதி திருச்சியில் "வெல்லும் ஜனநாயகம்" என்ற தலைப்பில் பிரம்மாண்ட மாநாடு, இந்தியா கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழாவாக இது அமையும் என்று திருமாவளவன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Thirumavalavan at Kovai
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "வெல்லும் ஜனநாயகம்" என்ற தலைப்பில் வரும் 26-ம் தேதி "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளிவிழா", "கட்சித் தலைமையின் அகவை 60 மணிவிழா" "இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள் விழா" என முப்பெரும் விழா திருச்சி சிறுகனூரில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடைபெறகிறது. 

Advertisment

 இந்த மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமை வகிக்கின்றார். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவை மாநிலத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 5 லட்சம் பேர் திரளாக கலந்து கொள்கின்றனர். 

இவ்விழாவில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் வரவேற்புரையாற்ற, மாநாட்டின் நோக்க உரையை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் வழங்குகிறார்.

தலைவர்கள் பங்கேற்பு 

தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ.எம்.எல் (விடுதலை) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியா, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தலைவருமான வேல்முருகன், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தலைவருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், சி.பி.ஐ (எம்.எல்) தமிழக மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் உள்ளிட்டோர் பங்கேற்று மாநாட்டில் சிறப்புரையாற்றவிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ். சிவசங்கர், சி.வெ.கணேசன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக, விசிக சார்பில் ஜன.26-ம் தேதி வெல்லும் ஜனநாயகம் மாநாடு தொடர்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (ஜன.23) டி.ஜி.பியை நேரில் சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, வெல்லும் ஜனநாயகம் மாநாடுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், மாநாட்டையொட்டி சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இருந்து திருச்சி வரை நடைபெறும் சுதந்திர சுடர், சமத்துவச் சுடர், சகோதரத்துவ சுடர் என்ற சுடர் ஓட்டங்களுக்கு பாதுகாப்பு தரக் கோரியும் டிஜிபியிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.

தொடர்ந்து,  இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் அரசியல் தலைவர்கள் டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்க விழாவாக இந்த மாநாடு அமைய உள்ளது. 
   
இந்தியா கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கான கால்கோல் விழாவாக இது அமையும். தேர்தல் நேரத்தில் மிக முக்கிய மாநாடாக இது ஒருங்கிணைப்படுகிறது. இதில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்றார்.
   
இந்த மாநாட்டு திடலில் இன்று திருச்சி சரக டி.ஐ.ஜி., திருச்சி மாவட்ட எஸ்.பி.வருண்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும், விசிக பிரமுகர்களும் முதல்வர் பங்கேற்கும் மேடை, வரும் பாதை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.  

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment