/indian-express-tamil/media/media_files/2024/11/30/ofVUHt62BlYN2wLlKDf7.jpg)
ஆதவ் அர்ஜூனா தொகுத்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை த.வெ.க தலைவர் விஜய் வெளியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அக்கட்சியின் கொள்கையை விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் விளக்கினார். இந்த மாநாட்டில் பேசிய விஜய், தனது அரசியல் எதிரிகள், கொள்ளை எதிரிகள் யார் என்பது குறித்து கூறியிருந்தார். அத்துடன், ‘எங்களுக்கு எந்த சாயமும் பூசாதீர்கள்’ எனக் கூறிவிட்டு தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளை நேரடியாகவே விமர்சித்தார்.
இந்த மாநாட்டிற்கு பிறகு, த.வெ.க தலைவர் விஜய் எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். கட்சியின் தலைமையகம் அமைந்திருக்கும் பனையூரில் அவ்வப்போது கட்சி நிர்வாகிகளை சந்திப்பது, ஆலோசனை நடத்துவது, மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்து அளிப்பது, மாநாட்டுக்கும் வரும் போது சாலை விபத்தில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பது போன்ற நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்று இருந்தார்.
இந்நிலையில், விஜய் முதல் முறையாக பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சி டிசம்பர் 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நூலை வெயிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நூலை பெற்றுக் கொண்டு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு உரையாற்ற உள்ளார். இந்த நிலையில், இந்த விழா குறித்த அழைப்பிதழில் .சி.க தலைவர் திருமாவளவன் பெயர் இடம் பெறவில்லை. அதனால், அவர் பங்கேற்க போவதில்லை. தற்போதை அரசியல் சூழல் காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.