ஒற்றை வார்த்தையில் திருமாவளவன் ட்வீட்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்தேசியம்” என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சமூக நீதி என்றும் ட்வீட் செய்திருந்தனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்தேசியம்” என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சமூக நீதி என்றும் ட்வீட் செய்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
thirumavalavan ஒரு வார்த்தை ட்வீட்

விசிக தலைவர் திருமாவளவன்

கடந்த சில நாள்களாக, ஒற்றை வார்த்தை ட்வீட் பிரபலமாகிவருகிறது. அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் தனிநபர்கள் ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்துவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் ஒற்றை வார்த்தை ட்வீட்டில் இணைந்துள்ளர்.
முன்னதாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிடம் என்று ஒற்றை வரியில் ட்வீட் செய்திருந்தார். தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை தமிழன் என்று ட்வீட் செய்திருந்தார்.
முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு என்றும் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்கள் என்றும் ட்வீட் செய்திருந்தார். ரஜினி ரசிகர்கள் வேறு தலைவர் என்று ட்வீட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்தேசியம்” என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சமூக நீதி என்றும் ட்வீட் செய்திருந்தனர்.
இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “சனநாயகம்” என்று ஒற்றை வார்த்தை ட்வீட் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

இதைப் பலரும் பகிர்ந்து, ரீட்வீட் செய்துவருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், “கிரிக்கெட்” என்று ஒரு சொல்லில் ட்வீட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin Sachin Tendulkar Annamalai Vck Ramadoss Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: