'எனது கார் மோதிய ஆதாரத்தை காட்டுங்க; பொது இடத்தில் மன்னிப்பு கேட்கிறேன்': திருமாவளவன் ஆவேசம்

வழக்கறிஞரை வி.சி.க தொண்டர்கள் தாக்கிய சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

வழக்கறிஞரை வி.சி.க தொண்டர்கள் தாக்கிய சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
thiru

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது சென்னை பாரிமுனை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது  வழக்கறிஞர் ஒருவரின் பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதி உள்ளது. 

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென திருமாவளவன் கார் ஓட்டுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால் வி.சி.கவினர் ஒன்றுகூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், வழக்கறிஞரை தாக்கிய விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது, ”அண்ணாமலை விமர்சனம் செய்வது உள்நோக்கம் கொண்டது. இருசக்கரம் மீது கார் மோதியது தொடர்பாக எந்த ஆதரமும் இல்லை. ஆனால், அந்நபர் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சத்தம் போட்டதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. பாதுகாப்பு வீரர்களும், தொண்டர்களும் அந்நபரை விலகி செல்லுங்கள் என்று சொன்னதற்கு அவர் கேட்கவில்லை. அந்த இடத்தில் நின்று வீணாக விவாதம் செய்தார். 

வண்டி மோதவில்லை என்ற நிலையில் அண்ணாமலை, கார் இருசக்கர வாகனத்தில் மோதியது என்று சொல்வதற்கு அண்ணாமலை எந்த புலனாய்வு அறிக்கையை பெற்றார். யார் அவருக்கு உறுதிப்படுத்தியது. அந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்கும் அண்ணாமலைக்கும் எதோ தொடர்பு இருக்கிறது. 
முன்னால் ஒரு ஆளை செட் செய்து வைத்து இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோ உடனடியாக அண்ணாமலைக்கு போய் இருக்கிறது. 

Advertisment
Advertisements

அரசியல் வட்டாரத்தில் நாங்கள் விசாரித்த வரைக்கும் இந்த சம்பவத்திற்கு பின்னால் பா.ஜ.க இருக்கிறது. இந்த சம்பவம் திட்டமிட்ட ஒன்று. இதுகுறித்து முதல்வரை சந்தித்து இதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்போகிறேன். இது என் பாதுகாப்பு தொடர்பான விஷயம். என்னை கண்டித்த சங்கங்கள், என் கார் இரு சக்கர வாகனத்தில் மோதியதாக ஆதாரத்தை காட்டுங்கள் நான் பொது இடத்தில் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.

Tamilnadu Vck

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: