/indian-express-tamil/media/media_files/2025/06/20/ravikumar-2-2025-06-20-16-34-43.jpg)
உலக அகதிகள் நாளான இன்று திண்டிவனம் தொகுதி கீழ்ப் புத்துப்பட்டில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடைக் கட்டிடத்தை வி.சி.க எம்.பி ரவிக்குமார் திறந்து வைத்தார்.
திபெத் அகதிகளுக்கு உள்ளதுபோல ஈழத் தமிழ் அகதிகளின் மறுவாழ்வுக் கொள்கை ஒன்றை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும் என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தினார்.
உலக அகதிகள் நாளான இன்று திண்டிவனம் தொகுதி கீழ்ப் புத்துப்பட்டில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடைக் கட்டிடத்தை வி.சி.க எம்.பி ரவிக்குமார் திறந்து வைத்தார். மேலும், முகாமில் இந்த ஆண்டு ப்ளஸ் டூ முடித்த மாணவர்கள் 20 பேருக்கு புத்தகப் பைகளை வழங்கினார்.
முகாமில் 440 நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒப்படைக்கப்படவில்லை. அது தொடர்பாக கூடுதல் ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் மழைக்காலம் என்பதால் இந்த மாதத்துக்குள் ஒப்படைத்தால் பேருதவியாக இருக்கும் என்று ரவிக்குமார் கூறியதாகத் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் நியாயவிலைக் கடைக் கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசிய ரவிக்குமார்: “அகதிகள் நலம் என்பது ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டியலில் வருகிறது. இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் திபெத் நாட்டு அகதிகளின் மறுவாழ்வுக்கென கொள்கை ஒன்றை (The Tibetan Rehabilitation Policy, 2014) 2014-ல் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. திபெத் அகதிகளுக்கு குத்தகைக்கு அரசே நிலம் வழங்கவும், நூறு நாள் வேலைத் திட்டம், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் திபெத் அகதிகளுக்கு வழங்கவும் அந்தக் கொள்கையில் ஆணையிடப்பட்டுள்ளது. திபெத் அகதிகளுக்கு உள்ளதுபோல ஈழத் தமிழ் அகதிகளின் மறுவாழ்வுக் கொள்கை ஒன்றை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும். அதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்த வேண்டும்” என ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, பி.டி.ஓ சிலம்புச்செல்வன், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், முகாம் தலைவர் கமல்ராஜ், வி.சி.க மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, தொகுதி துணைச் செயலாளர் நாகராஜ், ஊராட்சிமன்றத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் கலைஞர், மாவட்ட கவுன்சிலர் குப்புராஜ், வி.சி.க நிர்வாகிகள் மகேஸ்வரி, புஷ்பகாந்தன், மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.