வி.சி.க பொதுச் செயலாளரும் விழுப்புரம் எம்.பி-யுமான ரவிக்குமார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்வை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் ரயில்வே துறை செய்யவேண்டிய பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம் அளித்தார்.
வி.சி.க எம்.பி ரவிக்குமார் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்விடம் அளித்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் வருமாறு:
விழுப்புரம், வளவனூர் ஆகிய இடங்களில் ரயில்வே நிலையங்களையொட்டிப் பல தலைமுறைகளாகக் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றுக் குடியிருப்பு ஏற்பாடு செய்யாமல் வெளியேற்றக்கூடாது.
தேஜாஸ் ரயிலை விழுப்புரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், திண்டிவனம் ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும்
ரயில் எண் 849, 850-ஐ திருவண்ணாமலைக்கு நீட்டிக்க வேண்டும். அந்த ரயில்கள் ஆயந்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் ஜங்ஷனில் EMU ரயில் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை திருக்கோவிலூரில் நிறுத்த வேண்டும்.
உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், திருக்கோவிலூர் ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் அளிக்கப்பட்டுவந்த சலுகையை மீண்டும் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“