ஜெர்மனி நாட்டில் நடக்கும் கவிதை திருவிழாவில் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ழுதிய கவிதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.
ரவிக்குமார் எம்.பி கூறுகையில், ஜெர்மனி நாட்டில் உள்ள எர்லாங்கன் என்னும் நகரில் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மனித உரிமைகளுக்கான கவிதைத் திருவிழா நிகழ்வில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட எனது கவிதை பதாகையிலும், பிரசுரங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. ஜோர்ஜ் பொப்போவிக் ( Djordje Popovic ) அதை மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரிவித்துள்ளார்.
2020 ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நான் கவிதை எழுதி அதை எனது முகநூல் பக்கத்தில் அந்தக் கவிதையைப் பகிர்ந்திருந்தேன். அதை கே.வெங்கடரமணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அந்த கவிதைகள் இப்போது ஜெர்மனி நாட்டில் பயன்படுத்தியுள்ளனர். அங்கே ஆங்கிலத்தில் மட்டுமின்றி ஜெர்மன் மொழியிலும் அது வெளியிடப்பட்டிருக்கிறது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“