Advertisment

பண்பாட்டு மூலதனத்துக்கான போராட்டம்: தெருப் பெயரில் சாதியை நீக்கிய அரியலூர் கிராமம்

பட்டியல் சமூக மக்களின் குடியிருப்புகளின் பெயர்களில் இருக்கும் சாதி அடையாளத்தை நீக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்; வி.சி.க எம்.பி ரவிக்குமார் கோரிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anandavadi

தெருப் பெயரில் சாதியை நீக்கிய ஆனந்தவாடி கிராமம்

தெருப் பெயரில் சாதி அடையாள நீக்கம் வேண்டுமென விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் ஆதிதிராவிடர் தெரு என வருவாய்த்துறை ரெக்கார்டுகளில் குறிப்பிடப்பட்டு வந்த பெயரை இந்திரா நகர் என மாற்றுவதற்கு அந்த ஊரைச் சேர்ந்த அனுசுயா (Anusuya Saravanamuthu) என்பவர் கடந்த ஒரு ஆண்டாகப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஜி.எஸ்.டி வருவாயில் இலக்கைத் தாண்டிய கோவை மண்டலம்; முதல் முறையாக ரூ.3000 கோடி வசூல்

publive-image

பட்டியல் சமூக மக்களின் குடியிருப்புகளை சாதி அடையாளத்தோடு வருவாய்த்துறை ரெக்கார்டுகளில்

publive-image

பதிவு செய்து வைத்துள்ளனர். காலனி, சேரி, கீழத்தெரு, பள்ளத்தெரு இப்படித்தான் அவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதே பெயர்தான் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் உட்பட அனைத்து ஆவணங்களிலும் இடம்பெறும்.  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது சாதிச் சான்றிதழைப் பார்க்காமலேயே அவரது சாதியைத் தெரிந்துகொள்ளும் இழிவான நோக்கம் கொண்ட ஏற்பாடுதான் இது.

publive-image
publive-image
publive-image

இந்த நிலை தமிழ்நாடு முழுவதும் உள்ளது. பட்டியல் சமூக மக்களின் குடியிருப்புகளின் பெயர்களில் இருக்கும் சாதி அடையாளத்தை நீக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுமார் ஓராண்டுக்கு முன்பே மாண்புமிகு முதலமைச்சரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. அதில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆனந்தவாடியில் இந்திரா நகர் என்ற பெயர் சூட்டப் போராடிய அனுசுயா அவர்களுக்கு என் வாழ்த்துகள்! என விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ariyalur Ravikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment