scorecardresearch

சென்னை கே.கே. நகரில் பயங்கரம்; வி.சி.க. நிர்வாகி வெட்டிக் கொலை

சென்னை கே.கே. நகரில் இன்று அதிகாலை வி.சி.க நிர்வாகி ரமேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்படார்.

Trader commits suicide in Trichy
திருச்சியில் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ரமேஷ். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்.27) காலை அடையாளம் தெரியாத நபர்களால் ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
காரில் வந்த இரண்டு நபர்கள், அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொன்றனர். கே.கே. நகரில் இன்று காலை நடந்த இந்தக் கொலை அப்பகுதிவாசிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கொலை சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து, கொலையுண்ட ரமேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் கொலை அரசியல் காரணங்களுக்காக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vck party cadre ramesh was murdered in kk nagar chennai

Best of Express