தமிழ்நாட்டில் 50 இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் ஊர்வலத்துக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
காந்தி படுகொலை
அந்த மனுவில், “மத நல்லிணக்கத்தை கெடுத்து, பிரித்தாளும் சூழ்ச்சியை கொண்டது ஆர்.எஸ்.எஸ்., இயக்கம். இந்த இயக்கத்தின் கோட்சே, மகாத்மா காந்தியடிகளை கொன்றார்.
அப்போது இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. ஆகவே காந்தி ஜெயந்தி நாளில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது.
அம்பேத்கரை இழுக்க முயற்சி
மேலும் விஜயதசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இதன்மூலம் அம்பேத்கரை இந்துத்துவ ஆதரவாளராக சித்தரிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.
அதேவேளையில் அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்., சட்டம் ஒழுங்கு பிரச்னையை திட்டமிட்டுள்ளது.
விளம்பரத்துக்காக குண்டுகள் வீச்சு
தற்போது விளம்பரத்துக்காக குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு வழங்கினால் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு ஆபத்தாக முடியும்.
எனவே ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். .இந்த மனு ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“