விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் அசோக் குமார். இவர் நேற்று முன் தினம் (நவ.17) மாலை வடக்கிபாளையம் பிரிவில் வைக்கப்பட்டு உள்ள பேனர்களால் விபத்து அபாயம் ஏற்படும் எனக் கூறி அதனை அகற்றுமாறு பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம் தொலைபேசியில் பேசி உள்ளார்.
அப்போது உதவி கண்காணிப்பாளரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர். நேற்று அசோக்குமாரை கைது செய்தனர்.
மேலும் தெற்கு மாவட்ட செயலாளர் அசோக் குமார் கைது செய்யப்பட்டு வைத்து இருந்த இடம் தெரியாமல் கட்சி நிர்வாகிகள் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விடுதலை சிறுத்தை தெற்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“