Advertisment

அ.தி.மு.க அழைப்புக்கு நன்றி; பா.ஜ.க.,வை எதிர்க்க தி.மு.க கூட்டணியில் பயணிப்போம் - திருமாவளவன் உறுதி

அ.தி.மு.க மற்றும் சகோதரர் ஜெயக்குமாரின் அக்கறைக்கு வி.சி.க. சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்களின் முதன்மை இலக்கு; எனவே தி.மு.க.,வுடன் பயணிப்போம்; வி.சி.க தலைவர் திருமாவளவன்

author-image
WebDesk
New Update
vck meeting

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Janardhan Koushik

Advertisment

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், கூட்டணிக்கு அழைத்ததற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (அ.தி.மு.க) வி.சி.க நன்றி தெரிவிக்கிறது, ஆனால் பா.ஜ.க.,வை எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தொடர விரும்புகிறது என்று செவ்வாய்க்கிழமை கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க: VCK thanks AIADMK for invite but says it will stick to DMK-led alliance to take on BJP

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் முடிந்ததும் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அ.தி.மு.க மற்றும் சகோதரர் ஜெயக்குமாரின் அக்கறைக்கு வி.சி.க. சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் எங்களைப் பொறுத்த வரை இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்களின் முதன்மை இலக்கு. தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். மக்கள் நலனுக்காகவும், தேச நலனுக்காகவும், இத்தேர்தலை கருத்தியல் போராக அணுகி, கடந்த ஐந்தாண்டுகளாக தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பயணித்ததால், தற்போதைய நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் விலகிச் செல்ல வாய்ப்பில்லை," என்று கூறினார்.

வரும் லோக்சபா தேர்தலுக்கு தி.மு.க கூட்டணியில் போட்டியிட விரும்புவதை விட குறைவான இடங்கள் கிடைத்தாலும், பா.ஜ.க.,விடம் இருந்து தேசத்தை காக்க வேண்டும் என்பது முக்கியம் என்றும், அதன் அடிப்படையிலேயே தங்கள் முடிவு எடுக்கப்படும் என்றும் திருமாவளவன் கூறினார்.

தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை புதன் கிழமை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க அமைத்த குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு இன்னும் வரவில்லை. அழைப்பு வந்தவுடன், குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேவைப்பட்டால், முதல்வர் ஸ்டாலினையும் சந்திப்போம், என்று கூறினார்.

"எங்கள் பலத்தை நாங்கள் அறிவோம், அதன் அடிப்படையில் எங்கள் கோரிக்கைகளை வைக்கிறோம். முதல் சுற்று பேச்சுவார்த்தையில் நாங்கள் எங்கள் விருப்பத்தை தெரிவித்தோம், அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் நாங்கள் ஈடுபடவில்லை. ஆரம்ப சுற்றுகளில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் அப்படியே உள்ளன. இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு பின், சூழ்நிலைக்கு ஏற்ப, முடிவு எடுப்போம்,'' என்று திருமாவளவன் கூறினார்.

மற்ற தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வி.சி.க லோக்சபா தேர்தலில் பானைசின்னத்தில் போட்டியிடும் என்று திருமாவளவன் கூறினார். இது இலவச சின்னமாக இருந்தாலும், முந்தைய தேர்தல்களில் இந்தச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டுள்ளதால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு பானை சின்னத்தை ஒதுக்கும் என நம்புவதாக திருமாவளவன் குறிப்பிட்டார்.

திருமாவளவன் கருத்துப்படி, வி.சி.க தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 10 தொகுதிகளில் போட்டியிடும், அங்கு சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்கள் இரண்டும் ஒன்றாக நடைபெறுகிறது. ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளாவுடன் வி.சி.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி உள்பட 3 தொகுதிகளிலும் வி.சி.க போட்டியிட உள்ளது.

தாங்கள் இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், தனித்து வேட்புமனு தாக்கல் செய்தால் பா.ஜ.க.,வுக்கு பலன் கிடைக்கும் என்பதால், வாக்குகள் பிரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், அதனால், மற்ற மாநிலங்களில் உள்ள தங்கள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கேற்ப தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார். .

வரும் லோக்சபா தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதை எதிர்த்து, கருத்து தெரிவித்த திருமாவளவன், இது ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட வாய்ப்புள்ளது, எனவே ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என கருதி, தமிழகத்தில் நடத்திய போராட்டம் போல, வி.சி.க, மார்ச் 10ம் தேதிக்கு பிறகு நான்கு தென் மாநிலங்களில் போராட்டம் நடத்தும், என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thirumavalavan Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment