scorecardresearch

தமிழ்நாடு எனும் தனிநாடு.. தமிழ் தேசியத்தின் இலக்கு – திருமாவளவன்

தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு எனும் தனிநாடு.. தமிழ் தேசியத்தின் இலக்கு – திருமாவளவன்

வி.சி.க தலைவர் திருமாவளவன் குறித்த திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் எனும் தலைப்பில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஜெ. பாரத் என்பவர் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருமாவளவன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “அரசியல் என்பது பதவிக்காக, அதிகாரத்திற்காக, பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மிக மிகக் குறைந்த நபர்கள் தான் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கிறார்கள். அனைத்து கட்சியிலும் இந்த நபர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர். ஆனால் அப்படிப்பட்டவர்கள் தான் முக்கிய பொறுப்புகளை பெற்று கட்சியை வழி நடத்துகிறார்கள்.

அடங்க மறுப்போம், அத்து மீறுவோம், திருப்பி அடிப்போம் என்பது கொள்ளையா? கோட்பாடா? இது ஒரு செயல் திட்டம். ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இவை மூன்றும் தான் உழைக்கும் மக்களுக்கு பகை. சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், குடும்பம் என இவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒடுக்கப்படுகிற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கொள்ளை முழக்கம் தான் அடங்க மறுத்தல், அத்து மீறுதல், திருப்பி அடித்தல். இது வன்முறை முழக்கம் அல்ல, வன்முறைக்கு எதிரான முழக்கம். இது விடுதலைக்கான முழுக்கம். உலகில் ஒடுக்கு முறைக்கு உள்ளான அனைவருக்குமான முழக்கம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vck thirumavalavan book release event in chennai

Best of Express