scorecardresearch

என்னை குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொல்லிவிட்டு, பின்னர் மாற்றி விடுகிறார்கள் – திருமாவளவன் வேதனை

என்னை கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொல்லிவிட்டு, பின்னர் சான்றிதழில் மாற்றி விடுகிறார்கள் – திருமாவளவன் வேதனை

என்னை குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொல்லிவிட்டு, பின்னர் மாற்றி விடுகிறார்கள் – திருமாவளவன் வேதனை

தன்னிடம் பெயர் வைக்க சொல்லி வருபவர்கள், பின்னர் சான்றிதழில் வேறு பெயரை மாற்றிக் கொள்கிறார்கள், இதனால் எனக்கு பெயர் சூட்டும் ஆர்வமே போய்விட்டது என திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இன்று நிறைய குழந்தைகளின் பெயர்களுக்கான பொருளே தெரியவில்லை. நிறைய பேர் என்னிடம் வந்து குழந்தைகளைக் கொடுத்து, தமிழ் பெயர் சூட்டச் சொல்கிறார்கள். நானும் தமிழ் பெயரை சூட்டி விடுவேன். கொஞ்ச நாள் கழித்து, அந்த குழந்தை வளர்ந்த பின்னர், அந்த குழந்தையிடம் பெயரைக் கேட்டால், வேறு பெயரைச் சொல்கிறது.

இதையும் படியுங்கள்: மின்சார திருத்தச் சட்டம் 2022-ஐ திரும்ப பெறுக- தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

பெற்றோர்கள் கூட்டத்தில் அடித்து பிடித்து, குழந்தையை என்னிடம் கொடுத்து நீங்கள் பெயர் வைத்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி தமிழ் பெயர் வைக்க சொல்லிவிட்டு, பின்னர் சான்றிதழில் வேறு பெயரை மாற்றிக்கொள்கிறார்கள்.

இதனால் எனக்கு பெயர் சூட்டும் ஆர்வமே போய்விட்டது. நான் வைக்கும் பெயரை நீங்கள் வைக்க மறுக்கிறீர்கள். அப்புறம் ஏன் என்னை கட்டாயப்படுத்தி பெயர் வைக்கச் சொல்லி, என் நேரத்தை வீணடிக்கிறீர்கள், என்று திருமாவளவன் அதிருப்தியையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vck thirumavalavan disappointed children name changes