பொறியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு: நீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறித்தினார்.
இதுகுறித்து விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
"ஏழாவது ஊதியக் குழவின் பரிந்துரைகளை 2017 ல் தமிழக அரசு நடைமுறைபடுத்திய போது ஏற்பட்ட குறைகளையும் முரண்பாடுகளையும் களைவதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி டி. முருகேசன் தலைமையிலான ஆணையம் செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டத் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களின் அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஓவ்வொருவரும் சுமார் ரூபாய் 15, 000 வரை ஊதியக் குறைப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இது எந்த விதத்திலும் ஏற்கத்தக்க தல்ல. எனவே, நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும், எவருக்கும் ஊதியக் குறைப்போ பணிநிலைக் குறைப்போ செய்யக் கூடாது என்று வலியுறுத்திகிறோம்.
201௦ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொறியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய். 15, 000 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது நீதிபதி முகேசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி அந்த அடிப்படை ஊதியம் ரூபாய் . 9300/- எனக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதியாகும். 10 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பத்தாண்டுகள் கழித்து குறைத்து நிர்ணயித்த வரலாறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இந்த அநீதியை தமிழக அரசு உடனடியாகக் களைய வேண்டும். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை மட்டுமின்றி தமிழக அரசின் 20க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பொறியாளர்கள் இதனால் ஊதியக் குறைப்புக்கு ஆளாகிக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி நில அளவைத் துறையில் பணியாற்றும் ஆய்வாளர், துணை ஆய்வாளர் பதவிகளில் இருப்பவர்களுக்கு இப்போது பணி நிலையின் தகுதி குறைக்கப்பட்டிருக்கிறது. ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஏற்கத்தக்க தல்ல. இந்தக் குளறுபுடிகளை அகற்றுவதற்கு நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். புதிதாக ஒரு ஆணையத்தை அமைத்து இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே இருந்த அடிப்படை ஊதியத்தைத் தொடர்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்".
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.